'கூலி' படத்தின் வசூல் இதுதான்... ஓபனாக பேசிய லோகேஷ் கனகராஜ்
- விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
- அடுத்தப்படங்களில் அதிக விமர்சனங்களை தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடப்போகிறேன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி.' கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மேலும் படம் வசூல் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'கூலி' படம் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'கூலி' படம் மீது 1000 விமர்சனங்கள் இருந்தன. விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அடுத்தப்படங்களில் அதிக விமர்சனங்களை தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடப்போகிறேன்.
ரசிகர்களிடமிருந்து ஒரு படத்திற்கு விமர்சனம் வரும்போது, அதை ஏற்றுக்கொள்வது முக்கியம். அதே நேரத்தில், விமர்சனங்களை தாண்டியும் ரஜினி சாருக்காக மக்கள் தியேட்டரில் போய் படம் பார்த்து இருக்காங்க. படம் 500 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. மக்களுக்கு நன்றி.
அடுத்த படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததாலும், வாய்ப்பு கிடைக்காததாலும், படம் வெளியான நேரத்தில் விமர்சனம் குறித்து பேச முடியவில்லை என்று கூறினார்.