செய்திகள்

திவாகரனுக்கும் எனக்கும் எந்த வித சொத்து தகராறும் இல்லை- தினகரன் பேட்டி

Published On 2018-05-20 11:56 GMT   |   Update On 2018-05-20 11:56 GMT
திவாகரனுக்கும் எனக்கும் எந்த வித சொத்து தகராறும் இல்லை என்று டி.டி.வி. தினகரன் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #Divakaran #dinakaran #karnatakagovernor

சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் நடைபெறும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக டி.டி.வி. தினகரன் நேற்றிரவு சேலத்திற்கு வந்தார். இன்று காலை சேலத்தில் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அண்ணன் தம்பி என்றால் சொத்து தகராறு வரும். எனது முன்னாள் மாமா திவாகரனுக்கும், எனக்கும் சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுவது ஏற்புடையது அல்ல, அவருக்கும் எனக்கும் எந்த வித சொத்து தகராறும் இல்லை.

துரோக கும்பலுடன் அவர் சேர்ந்து விட்டார். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சுக்கு அவர் ஏஜெண்டாக செயல் படுகிறார். மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம்.


கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் பெரும்பான்மையை முதலில் நிரூபிக்கும் படி கவர்னர் கூறி இருக்கலாம்.

104 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் நீடித்துள்ளது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு வரவேற்கதக்கது.

அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்திலேயே பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது தொடர்பாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.

இது தொடர்பாக எங்கள் வாதங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அ.தி.மு.க. வை சேர்ந்த பலரும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். விரைவில் நிர்வாகிகளும் எங்கள் பக்கம் வருவார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் ஆகியோரிடம் பேசினேன். மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்ற உத்தரவை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 

இவ்வாறு அவர் கூறினார். #Divakaran #dinakaran #karnatakagovernor

Tags:    

Similar News