செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவு- கணிதத்தில் 96.19 சதவீதம், இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் தேர்ச்சி

Published On 2018-05-16 05:40 GMT   |   Update On 2018-05-16 05:40 GMT
தமிழகம் முழுவதும் பிளஸ்- 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் கணிதத்தில் 96.19 சதவீதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் #PlusTwoExamResults #Plus2Result
சென்னை:

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

மொழிப்பாடத்தில் 8,60,434 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 319 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும்.

ஆங்கிலம் பாடத்தில் 8,34,370 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.97 ஆகும்.

இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 5 லட்சத்து 44 ஆயிரத்து 553 பேர் தேர்வு எழுதினர். இதில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 163 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர்.

வேதியியல் பாடத்தில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 419 பேர் தேர்ச்சி பெற்றனர். 95.02 சதவீதம் தேர்ச்சியாகும்.

உயிரியல் பாடத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 325 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 10 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.34 ஆகும்.

கணிதம் பாடத்தை 4 லட்சத்து 39 ஆயிரத்து 518 பேர் எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 775 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.19 ஆகும்.


கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை 3,18,167 பேர் எழுதினார்கள். இதில் 3,05,899 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.14 ஆகும்.

புவியியல் பாடத்தை 13,972 பேர் எழுதினர். இதில் 13,862 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.21 ஆகும். ஹோம் சயின்ஸ் பாடத்தில் 99.78 சதவீதமும், புள்ளியியல் பாடத்தில் 98.31 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

231 மாணவ-மாணவிகள் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதில் 181 மாணவிகள் அடங்குவர். மீதியுள்ள 50 பேர் மாண வர்கள்.

1151 -1180 மதிப்பெண் வரை 4847 பேரும், 1126-1150 மார்க்வரை 8510 பேரும், 1101-1125 மதிப்பெண் வரை 11,739 பேரும் பெற்று உள்ளனர். 1001-1,100 மார்க்வரை 71,368 பேரும், 901-1000 மதிப்பெண்வரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 266 பேர் பெற்றுள்ளனர்.  #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
Tags:    

Similar News