செய்திகள்

நிர்மலாதேவி விவகாரம்: பேராசிரியர் முருகன்-கருப்பசாமிக்கு 28-ந் தேதி வரை காவல் நீடிப்பு

Published On 2018-05-14 07:23 GMT   |   Update On 2018-05-14 07:23 GMT
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு வருகிற 28-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi #Murugan #Karuppasamy
விருதுநகர்:

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முருகன், கருப்பசாமியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இருவரும் இன்று காலை மதுரை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருதுநகர் அழைத்துச் செல்லப்பட்டு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்.1) ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை வருகிற 28-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் உத்தரவிட்டார். முருகன் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி, அவரது மனைவி சுஜா கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

அவர் நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவருக்கு ஜாமீன் கிடைத்த பிறகு உங்களை சந்திக்கிறேன். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க நீங்கள் உதவ வேண்டும் என்றார். #NirmalaDevi #Murugan #Karuppasamy
Tags:    

Similar News