செய்திகள்

விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் போராட்டம்- வேல்முருகன்

Published On 2018-05-12 15:44 IST   |   Update On 2018-05-12 15:44:00 IST
சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார். #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
ஓமலூர்:

சேலம் விமான நிலையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் விமான நிலையத்திற்கு ஏற்கனவே நிலம் கொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விவசாயிகள் நிலத்தை எடுத்தால் அவர்கள் எங்கே செல்வார்கள்.

சேலம் உருக்காலை மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் ஆலை அருகில் பல ஆயிரம் ஏக்கர் காலி நிலங்கள் உள்ளன. அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.

அதையும் மீறி விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

காவிரி மேலாண்மை வாரியத்தை வி.பி.சிங் உருவாக்கியது போல முழு அதிகாரத்துடன் அமைத்தால் தான் ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறினார். #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
Tags:    

Similar News