செய்திகள்

ரமலானை முன்னிட்டு மசூதிகளுக்கு 5 ஆயிரம் டன் இலவச அரிசி வழங்க முதல்வர் உத்தரவு

Published On 2018-05-10 14:37 GMT   |   Update On 2018-05-10 14:37 GMT
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு இலவசமாக 5 ஆயிரம் டன் அரிசியை வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடுவது வழக்கம். இந்த மாதம், இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளிலிருந்து வருடந்தோறும் அரசு சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் இஸ்லாமிய அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ள 3000 மசூதிகளுக்கு, சுமார் 5 ஆயிரத்து 145 டன் அளவிலான அரிசியை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CMpalaniswami #freericetomosques
Tags:    

Similar News