செய்திகள்

மாமல்லபுரம் கடற்கரை விடுதிகளில் கீற்று கொட்டகைகள்  அகற்றம்

Published On 2018-03-16 15:07 IST   |   Update On 2018-03-16 15:07:00 IST
மாமல்லபுரம் கடற்கரையில் தீ விபத்தை தடுக்க அனைத்து விடுதிகளிலும் மாடியில் இருந்த கீற்று கொட்டகை அகற்றப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு கடற்கரையோரத்தில் ஏராளமான விடுதிகள் உள்ளன. சுற்றுலா பயணிகளை கவர விடுதியின் மேல் பகுதியில் கீற்று கொட்டகைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருந்த கீற்று கொட்டகை தீப்பிடித்து எரிந்து அருகில் இருந்த 4 விடுதிகளுக்கு பரவியது. இதில் அங்கு தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தப்பி ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதையடுத்து உடனடியாக அனைத்து விடுதிகளிலும் கீற்று கொட்டகைகளை அகற்றிவிட்டு தகரசீட் போட வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். கால அவகாசத்தை மீறிய சில விடுதிகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர் .

தற்போது அனைத்து விடுதிகளிலும் மாடியில் இருந்த கீற்று கொட்டகை அகற்றப்பட்டு உள்ளது. இதனால் மாமல்லபுரம் கடலோர விடுதிகள் அனைத்தும் புதுப்பொழிவுடன் கானப்படுகிறது. #Tamilnews

Similar News