செய்திகள்
செங்கல்பட்டு அருகே கூலித்தகராறில் விவசாயி கொலை
செங்கல்பட்டு அருகே கூலித்தகராறில் விவசாயியை அடித்து கொலை செய்த வடமாநில வாலிபர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் காந்தி தெருவை சேர்ந்தவர் குப்பன் (வயது 46). இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு இன்று தேர்வு தொடங்கியது.
குப்பனுக்கு சொந்தமான விவசாய நிலம் வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு அவர் விவசாயம் செய்து வந்தார். விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் ஹாலோ பிளாக் செய்து விற்று வந்தார்.
நேற்று விவசாய நிலத்துக்கு சென்ற குப்பன் வீடு திரும்பிவல்லை. இன்று காலை அவர் தனது விவசாய நிலத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் உருட்டு கட்டையால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன.
இது தொடர்பாக அவரது மனைவி மாலாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. கூலி தகராறில் குப்பன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
குப்பன் விவசாய நிலத்தில் ஹாலோ பிளாக் தயாரித்து விற்று வந்தார். அவரிடம் வட மாநிலத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு கூலி பாக்கி கொடுக்க வேண்டி இருந்தது. சரியாக கூலி கொடுக்காததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 பேரும் வேலையை விட்டு நின்று விட்டனர். இதனால் கடந்த 6 மாதமாக குப்பன் ஹாலோ பிளாக் தயாரிக்கவில்லை.
இந்த நிலையில் குப்பன் 4 பேருக்கும் போன் செய்து வரவழைத்தார். நேற்று இரவு 4 பேரும் குப்பனை சந்தித்தனர். அவர்களுக்கு குப்பன் இரவு உணவு வாங்கி கொடுத்தார். பின்னர் அவர்களை விவசாய நிலத்துக்கு அழைத்து சென்று ரூ.3000 பணம் கொடுத்தார். இனி ஹாலோ பிளாக் தயாரிக்கும் வேலையை தொடங்குவோம். விரைவில் கூலி பாக்கியை தருகிறேன் என்றார்.
ஆனால் அவர்கள் கூலி பாக்கி முழுவதையும் உடனே தரவேண்டும். தந்தால் தான் வேலை பார்ப்போம் என்றனர். இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் உருட்டுக்கட்டையால் குப்பனை தாக்கி கொலை செய்தனர். பின்னர் பிணத்தை அங்கேயே போட்டு விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இந்த கொலை தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வட மாநில வாலிபர்களை தேடி வருகிறார். #Tamilnews