செய்திகள்
தேவகி

கானத்தூரில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்ற பெண் மரணம்

Published On 2018-03-15 15:45 IST   |   Update On 2018-03-15 15:45:00 IST
கானத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்ற பெண் திடீரென மரணமடைந்ததை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழிங்கநல்லூர்:

நீலாங்கரையை அடுத்த கானத்தூர், துலுக்கானந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேவகி (வயது 40). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்ட மாத்திரைகளை தின்ற போது மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தேவகியை அதே ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவகி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அறிந்ததும் தேவகியின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தவறான சிகிச்சையால் உயிர் இழந்ததாக கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கானத்தூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தேவகிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அடையாறு துணை கமி‌ஷனர் ரோகித் நாதன் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தார். #Tamilnews

Similar News