செய்திகள்

காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தொழிலாளி மரணம்

Published On 2018-03-15 15:29 IST   |   Update On 2018-03-15 15:29:00 IST
காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த சீமாளம் அருந்ததிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் குமார் (37). கட்டிட மேஸ்திரி.

இவர் தனது மோட்டார் சைக்கிளில் உடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த அமுதாவை ஏற்றிக் கொண்டு விஷாரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

கீழ்கதிர்பூர் அருகே வந்து கொண்டிருந்த போது கீழம்பி கிராமத்திலிருந்து வந்த மோகன் (38) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் குமார் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அமுதா, மோகன் ஆகியோர் காயத்துடன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.பிரபாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமாரின் உடலை கைப்பற்றி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews

Similar News