செய்திகள்

கல்பாக்கம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை- போலீசார் விசாரணை

Published On 2018-03-12 14:36 IST   |   Update On 2018-03-12 14:36:00 IST
கல்பாக்கம் அருகே ஆட்டோ டிரைவர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:

கல்பாக்கம் அருகே உள்ள ஆயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). லோடு ஆட்டோ டிரைவர்.

இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற செல்வம் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பூந்தண்டலம் பகுதியில் உள்ள வயல்வெளியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் செல்வம் பிணமாக கிடந்தார். மர்ம கும்பல் அவரை கொலை செய்து தப்பி இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செல்வம் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவரது லோடு ஆட்டோ நின்றது. அதன் என்ஜின் ‘ஆப்’ செய்யப்படாமல் இயங்கிய படியே இருந்தது.

எனவே செல்வம் வந்த லோடு ஆட்டோவை மர்ம கும்பல் பின் தொடர்ந்து வந்து வழிமறித்து இருக்கலாம் என்றும் பயந்து போன அவர் வண்டியில் இருந்து இறங்கி ஒட்டம் பிடித்தபோது விரட்டிச் சென்று கொலை செய்து இருக்கலாம் என்றும் தெரிகிறது.

செல்வத்துக்கு யாருடனும் மோதல் உள்ளதா? பெண் தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செல்வம் பயன்படுத்திய செல்போனில் கடைசியாக யார்? யாருடன் பேசினார் என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

கொலையுண்ட செல்வத்துக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

Similar News