செய்திகள்

மயிலாடுதுறை அருகே சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2017-12-13 10:00 GMT   |   Update On 2017-12-13 10:01 GMT
மயிலாடுதுறை அருகே 11 மாத ஊதிய நிலுவையை வழங்ககோரி சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அடுத்துள்ள பட்டவர்த்தியில் நடிப்பிசை புலவர் கே.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால். திறக்கப்பட்டு நல்ல லாபகரமாக செயல்பட்டு வந்த சர்க்கரை ஆலை படிப்படியாக அதன் அரவை குறைக்கப்பட்டது.

நிர்வாக சீர்கேடுகளால் 2016-17ம் ஆண்டுக்காண அரவை மில் ஆரம்பிக்காமல் உள்ளனர். இதில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களை படிப்படியாக இடமாற்றம் செய்தனர். எஞ்சிய 210 பேரை ஒரே நாளில் இடமாற்றம் வழங்கினர். இதனால் ஊழியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதில் தமிழக அரசின் கரும்புத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். அதில் தாங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை வாபஸ் வாங்க வேண்டும்.

கடந்த 11 மாதமாக வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை 8கோடியை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச, ஐ.என்.டி.யூ.சி. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டியூசி, பணியாளர்கள் பேரவையினர் தே.மு.தி.க. பா.தொ.சங்கம் டாக்டர். அம்பேத்கர் தொ.சங்கம்,பொது தொழிலாளர் சங்கம் கரும்பு விவசாயிகள் சங்கம் கரும்பு உதவியாளர் சங்கம்,தொழிலாளர் கூட்டமைப்பு ஆகிய சங்க நிர்வாகிகள் தலைமையிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாநில பொதுசெயலாளர் கே.முருகன் மற்றும் அனைத்து கட்சியினர் உண்ணாவிரததில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News