செய்திகள்

வேப்பூர் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 8 பவுன் நகை கொள்ளை

Published On 2017-09-20 16:21 IST   |   Update On 2017-09-20 16:21:00 IST
வேப்பூர் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பொயனை பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவரது மனைவி அலமேலு(வயது45).

நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் படுத்து தூங்கினர். இன்று அதிகாலை 3 மணிஅளவில் மர்ம மனிதர்கள் ராமலிங்கம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கு படுத்து தூங்கிகொண்டிருந்த அலமேலு கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி செயினை பறித்தனர்.

அப்போது திடுக்கிட்டு எழுந்த அலமேலு கூச்சல் போட்டு அலறினார்.அப்போது நகை பறித்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ராமலிங்கம் சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை தேடிவருகிறார்கள்.

வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News