செய்திகள்

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது

Published On 2017-04-24 17:53 IST   |   Update On 2017-04-24 17:54:00 IST
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீழ்வேளூர்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்பேரில், கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் புயல்பாலச்சந்திரன், லலிதா மற்றும் போலீசார் கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சிக்கல் விதைப்பண்ணை அருகே சாராயம் விற்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் நாகையை அடுத்த செல்லூரை சேர்ந்த முருகன் (வயது39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர்.

இதே போல கீழ்வேளூரை அடுத்த சிக்கவலம் மெயின்ரோடு பகுதியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வி (52) என்பவரையும், கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் ஊராட்சி எறும்புகண்ணி பகுதியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த முருகன் (47) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரிடம் இருந்து சுமார் 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News