செய்திகள்
10 நாட்களுக்கு மேலாக 53 அடியில் நீடிக்கும் பவானி சாகர் அணை
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் கடந்த 10 நாட்களுக்கு மேலாக 53 அடியிலேயே தொடர்ந்து நீடிக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் கடந்த ஆண்டை விட 10 அடிக்கும் கீழாக தண்ணீர் உள்ளது. இதனால் கீழ் பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யும் அணைக்கு தண்ணீர் வரும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் விவசாயிகளின் எதிர்பார்பபை மழை பொய்யாக்கி விட்டது.
இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு 72 கனஅடி தண்ணீர் மட்டும் வருகிறது. வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 53.04 அடியாக உள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 53 அடியிலேயே தொடர்ந்து நீடிக்கிறது. அணைக்கு கூடுதலாக 10 அடி இருந்தால் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடலாம் என்ற நிலையில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வேண்டும் என ஒட்டு மொத்த விவசாயிகளும் வருண பகவானை வேண்டியபடி உள்ளனர்.