செய்திகள்

பர்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் படுகாயம்

Published On 2016-09-28 17:22 IST   |   Update On 2016-09-28 17:22:00 IST
பர்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

அம்மாப்பேட்டை அருகே உள்ள பூதப்பாடியை சேர்ந்தவர் இளம்பரிதி. மரம் ஏறும் தொழிலாளி. இவர் தனது மனைவி அன்புக்கரசி, மகன் சந்திரமோகன், மற்றும் மகள் சைலஜாவுடன் மோட்டார் சைக்கிளில் மைசூருக்கு மரம் ஏறும் தொழிலுக்கு சென்றார்.

மோட்டார் சைக்கிளில் இவர்கள் பர்கூர் அருகே உள்ள கர்கேகண்டி ரோடு பெரியமலை சுற்று அருகே சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது எதிரே வந்த ஒரு வேன் இளம்பரிதி சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற இளம்பரிதி, அவரது மனைவி அன்புக்கரசி, மற்றும் மகன் சந்திரமோகன், மகள் சைலஜா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News