செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் காயம்

Published On 2016-09-28 16:57 IST   |   Update On 2016-09-28 16:58:00 IST
நடந்து சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.

அரச்சலூர்:

அரச்சலூர் காங்கயம் ரோட்டைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 65). இவர் அரச்சலூர் பழைய போலீஸ் நிலையம் முன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் நாராயணன் மீது மோதியது.

இதில் தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த அடிபட்ட அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து அரச்சலூர் போலீசில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News