செய்திகள்

அந்தியூர்-ஆப்பக்கூடலில் சாரல் மழை பெய்தது

Published On 2016-09-27 17:02 IST   |   Update On 2016-09-27 17:02:00 IST
அந்தியூர் மற்றும் ஆப்பக்கூடலில் சாரல் மழை பெய்தது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை மழை பெய்வது போல் மேக கூட்டங்கள் திரண்டு வந்தன. ஆனால் ஒரு சில துளிகள் மட்டும் போட்டு விட்டு ஏமாற்றி சென்று விட்டது.

அதே சமயம் ஒரு சில இடங்களில் இதமான காற்றுடன் சாரல் மழை பெய்தது.

அந்தியூரில் இன்று காலை 6.30 மணிக்கு பெய்த சாரல் மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இந்த மழையால் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ச்சியான நிலை இருந்தது.

இதே போல் ஆப்பக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் 15 நிமிடம் சாரல் மழை பெய்தது.

இதே போல் சத்தி வனப்பகுதிகளான திம்பம், ஆசனூரிலும் சாரல் மழை பெய்தது.

Similar News