செய்திகள்

சத்தியமங்கலம் அருகே குளிர்பானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது - போக்குவரத்து பாதிப்பு

Published On 2016-09-26 12:07 GMT   |   Update On 2016-09-26 12:07 GMT
சத்தியமங்கலம் அருகே குளிர்பானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:

மைசூரில் இருந்து பாலக்காட்டுக்கு குளிர்பானம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சத்தியமங்கலம் அடுத்துள்ள புதுவடவள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் லாரி நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரி, ஓட்டுநர் சிவக்குமார் கிளீனர் முருகேசன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த ஹரிபிரசாத் ஆகியோர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நடந்த பகுதி கிராமம் என்பதால் அங்கு வந்த கிராம மக்கள் லாரியில் இருந்து விழுந்த குளிர்பான பாட்டில்களை அள்ளிச் சென்றனர். இதையறிந்த மேலும் ஏராளமானோர் குளிர்பான பாட்டில்களை எடுத்துச் செல்ல வந்தபோது போலீசார் தடுத்தனர்.

இந்த விபத்து காரணமாக சத்தி மைசூர் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் லாரியில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 800 பாட்டில்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Similar News