செய்திகள்
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 15 ஆண்டு சிறை: அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு
அரியலூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சுதாகர் (வயது 29). இவர், கடந்த 9-7-2016 அன்று ரெங்கசமுத்திரம் கிராமத்தில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை சுதாகர் தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சுதாகருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் சுதாகரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.