செய்திகள்
மீன்சுருட்டி அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி
மீன்சுருட்டி அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி போலீசார் விசாரணை.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி சுண்டிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (50)கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை– கும்பகோணம் ரோட்டில் நெல்லித்தோப்பு கடைவீதியில் சைக்கிளில் சென்றார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் விஸ்வ நாதன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி, பஸ்சை ஓட்டிவந்த மன்னார்குடி மேலநத்தம் நடுத்தெருவைச் சேர்ந்த ஆரோக்கியசாமியை கைது செய்தனர்.