உள்ளூர் செய்திகள்

கோவையில் கர்ப்பிணி உள்பட 2 இளம்பெண்கள் மாயம்

Published On 2022-12-07 14:43 IST   |   Update On 2022-12-07 14:43:00 IST
  • சுபா ஆர்.எஸ்.புரத்தை உள்ள அவரது தாயார் வீட்டில் இருந்து வந்தார்.
  • குடும்பத்தினருடன் சேர்ந்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.

குனியமுத்தூர்,

கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதிப்குமார் (வயது 25). தொழிலாளி. இவரது மனைவி சுபா (24).

சுபா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். இதனால் அவர் ஆர்.எஸ்.புரத்தை உள்ள அவரது தாயார் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று சுபா வீட்டில் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

அதன்பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே பிரதிப்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் குடும்பத்தினருடன் சேர்ந்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து பிரதிப்குமார் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன் (52). இவரது மகள் கார்குழலி (27).

இவர் சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கார் குழலின் கணவர் அஜித்குமார் (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று அஜித்குமார் தனது மூத்த மகனை அழைத்துக் கொண்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை சென்றார்.

இந்நிலையில் கார்குழலி ஒருவரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடன் கொடுத்தவர் பணத்தை திருப்பி கேட்டு திட்டியதால் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது 2-வது குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு சென்றார்.

அவரது தந்தை முருகன் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். 

Tags:    

Similar News