உள்ளூர் செய்திகள்

மொரப்பூர் தி.மு.க சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Published On 2023-05-13 14:42 IST   |   Update On 2023-05-13 14:42:00 IST
  • தி.மு.க சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திப்பம்பட்டி கூட்ரோட்டில் நடைபெற்றது.
  • தலைமை கழக பேச்சாளர் தானூர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கிப் பேசினார்.

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திப்பம்பட்டி கூட்ரோட்டில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல் தலைமை வகித்தார்.பன்னிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் வெற்றி செல்வன் துரை வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்திற்கு கம்பைநல்லூர் பேரூராட்சித் தலைவர் வடமலை முருகன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மாசிலாமணி, மொரப்பூர் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் பன்னீர்செல்வம், கம்பைநல்லூர் நகர செயலாளர் மோகன், பன்னிக் குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதா துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தானூர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன், மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் வாசுதேவன், ஒன்றிய குழு உறுப்பினர் பழனியம்மாள் ரவி, இருமத்தூர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரசேகரன், அருண், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் கிருஷ்ணன், கொன்றம்பட்டி சிவக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பேசும் தெய்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மினி துரைசாமி, நாகராஜ், மாதையன், மனோகரன், ஈச்சம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வெள்ளையன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராயப்பன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராசி தமிழ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News