உள்ளூர் செய்திகள்

2 தம்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த மர்மகும்பல்

Published On 2023-05-02 09:39 GMT   |   Update On 2023-05-02 09:39 GMT
  • திருவாரூர் செல்வதற்காக புதுக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
  • 10 பவுன் மதிப்புள்ள 2 தாலி செயின்களை முகமூடி அணிந்து வந்த கும்பல் பறித்து சென்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவரது மனைவி பாக்யா (33).

இவர்கள் இருவரும் நாச்சியார்கோவிலில் உள்ள உறவினர் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தென்கரையில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டி ருந்தனர்.

அப்போது புதுக்குடி என்கிற இடத்தில் 3 பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல் இந்த தம்பதி யினரை வழிமறித்துள்ளது.

கத்தியை காட்டி கொன்று விடுவேன் என்று மிரட்டி பாக்யாவின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை பறித்ததுடன் அவரது கணவரிடம் இருந்துசெல்போ னையும் பறித்துள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் வந்த இருசக்கர வாக னத்தையும் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து சிறிது தூரத்தில் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 32) பானுமதி 26) என்கிற இருவரும் திருவாரூர் செல்வதற்காக புதுக்குடியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களையும் இந்த முகமூடி கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பானுமதி கழுத்தில் இருந்த தாலிச் செயினையும் பறித்துள்ளனர்.

மொத்தம் 10 பவுன் மதிப்புள்ள இரண்டு தாலிச் செயின்களை அடுத்தடுத்து இந்த முகமூடி கும்பல் பறித்து சென்றுள்ளது.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடவாசல் காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காட்சிகள் இருள் சூழ்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த நான்கு மாதத்தில் இதே இடத்தில் வழிப்பறி பணத்தை அடித்து பறிப்பது போன்ற ஐந்து சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இப்பகுதியில் இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமிராக்களை பொருத்தி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News