கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது
- போலீசார் சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் மேம்பாலத்திற்கு அடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
- போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
குனியமுத்தூர்,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் மேம்பாலத்திற்கு அடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுந்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 400 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் காரை ஓட்டி வந்த ஆவாரம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் சிங்காநல்லூர் அருகே நீலிகோணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ராபியா என்பவர் மூலமாக நீலிக்கோணம் பாளையம், கள்ளிமடை, ஒண்டிப்புதூர், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் பெண்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி, கள்ளச் சந்தையில் கேரளாவுக்கு கடத்தி சென்று மளிகை கடை மற்றும் ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் ராபியாவையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.