உள்ளூர் செய்திகள்

கைதான 2 பேரையும், பறிமுதல் செய்த ஆட்டோவையும் படத்தில் காணலாம்.

நாங்குநேரி அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

Published On 2023-11-01 08:52 GMT   |   Update On 2023-11-01 08:52 GMT
  • நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • இதில் ஆட்டோவில் 9 சாக்குகளில் 360 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

களக்காடு:

நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ஆட்டோவில் 9 சாக்குகளில் 360 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்த பொன்னாகுடி சமத்துவபுரத்தை சேர்ந்த சசிகுமார் (27), அவரது தம்பி ரஞ்சித்குமார் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட ஆட்டோவையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News