உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.
வடமதுரை அருகே சண்டையை விலக்கி விடாத வாலிபருக்கு அடி-உதை: 2 பேர் கைது
வடமதுரையில் சண்டையை விலக்கி விடாத வாலிபரை சரமாரியாக தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள தென்னம்பட்டி ஆண்டிபட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் முள்ளம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது தென்னம்பட்டியை சேர்ந்த மோகன் (வயது24), மாரீஸ் (28) ஆகியோர் சண்டைபோட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டுகொள்ளாமல் மணிமாறன் சென்று விட்டார். இதனையடுத்து தங்களது வாகனத்தில் துரத்தி சென்ற இருவரும் மணிமாறனை மறித்து நாங்கள் சண்டை போட்டுக்கொண்டுள்ளோம்.
விலக்கி விடமாட்டாயா என அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மணிமாறன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து ஆகியோர் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன் மற்றும் மாரீசை கைது செய்தனர்.