பலியான ஆடுகள்
விளாத்திகுளத்தில் வெறிநாய் கடித்ததில் 2 ஆடுகள் பலி
- வேல்முருகன் வைத்திருந்த 2 ஆடுகளும் வெறி நாய்கள் கடித்தபடி இறந்த நிலையில் கிடந்துள்ளது.
- வேல்முருகனின் ஆட்டுக்கொட்டகைக்குச் சென்ற பேரூராட்சி அதிகாரிகள் நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் பாரதி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஆடுகள் வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல நேற்று ஆடுகளை ஆட்டுக்கொட்டகை யில் அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார்.
இன்று காலை மேய்ச்சலுக்கு ஆடுகளைக் கூட்டிச் செல்ல கொட்டகையில் சென்று பார்த்தபோது, வேல்முருகன் வைத்திருந்த 2 ஆடுகளும் வெறி நாய்கள் கடித்தபடி இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து வேல்முருகனின் ஆட்டுக்கொட்டகைக்குச் சென்ற பேரூராட்சி அதிகாரிகள் நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் கடந்த ஒரு வார காலமாகவே இப்பகுதியில் வெறிநாய்கள் கடித்து பல ஆடுகள் மற்றும் கன்று குட்டிகள் பலியாகி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆகையால், விளாத்திகுளம் பகுதியில் அதிக அளவில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடித்து காப்பகத்தில் விட வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.