கோவையில் 2 பெண் புரோக்கர்கள் கைது
- 2 பெண்கள் அந்த வாலிபரிடம் எங்களிடம் அழகான இளம் பெண்கள் உள்ளனர் என தெரிவித்தனர்.
- 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கோவை,
கோவை பாப்பநாயக்கன்பாளையம் ராமசாமி லே-அவுட் ரோடு வழியாக வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த 2 பெண்கள் அந்த வாலிபரிடம் எங்களிடம் அழகான இளம் பெண்கள் உள்ளனர். பணம் கொடுத்தால் நீங்கள் உல்லாசம் அனுபவிக்கலாம். போலீஸ் தொந்தரவு இருக்காது என்றனர்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 4 இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசார புரோக்கர்களான சூலூரை சேர்ந்த நிர்மலா (வயது 49), திருப்பூர் அருகே சோமனூரை சேர்ந்த சப்னா என்ற சத்யா (30) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என குறிப்பிட த்தக்கது.
பின்னர் அங்கிருந்த 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.