வானூர் அருகே வாலிபரை வெட்டிக் கொன்ற 2 பேர் கைது
- முரளி தாசை சந்திக்க பாபு தனது நண்பரை அழைத்துக் கொண்டு அச்சரம்பட்டு கிராமத்திற்கு சென்றார்.
- இன்று அதிகாலை 4 மணியளவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள அச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளிதாஸ் (வயது 32). இவருக்கும் பிரம்மதேசம் அடுத்த பழமுக்கலை சேர்ந்த பாபுவிற்கும் (38) இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது. முரளி தாசை சந்திக்க பாபு தனது நண்பரை அழைத்துக் கொண்டு அச்சரம்பட்டு கிராமத்திற்கு சென்றார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், முரளிதாசை பாபு கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முரளிதாஸ் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பாபுவை தேடி வந்தனர்.
பாபுவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற புதுவை மாநிலம் கோரிமேடு பகுதியை சேர்ந்த ஜெகனை ஆரோவில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர். அங்கு உறவினர் வீட்டில் மறைந்திருந்த பாபுவை இன்று அதிகாலை 4 மணியளவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை ஆரோவில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.