உள்ளூர் செய்திகள்

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இயற்பியல் செய்முறை மேம்பாட்டு பயிற்சி

Published On 2023-10-07 14:01 IST   |   Update On 2023-10-07 14:01:00 IST
  • 12-ம் வகுப்பு செய்முறை பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து ஆய்வுகளையும் சிறந்த முறையில் தெளிவாக செய்யும் வகையில் இயற்பியல் துறை மாணவிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது.
  • இப்பயிற்சி வகுப்பில் காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுபைதார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுமார் 77 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இயற்பியலை இலகுவான முறையில் ஆர்வமுடன் கற்கும் விதமாக கடந்த 2 நாட்களாக செய்முறை மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. 12-ம் வகுப்பு செய்முறை பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து ஆய்வுகளையும் சிறந்த முறையில் தெளிவாக செய்யும் வகையில் இயற்பியல் துறை மாணவிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுபைதார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுமார் 77 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பின்னர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவிற்கு கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ரேணுகா தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் ஜோ ஜாக்குலின் அமலியா வரவேற்று பேசினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர்கள் கற்பகவல்லி, வசுமதி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News