உள்ளூர் செய்திகள்

கட்டுரை, பேச்சுப்போட்டியில் 100 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Published On 2023-02-22 07:00 GMT   |   Update On 2023-02-22 07:00 GMT
  • மாணவா்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.
  • போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் ரவி செய்திருந்தாா்.

திருப்பூர் :

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புத்தக கல்வியோடு சிறந்த பண்புகளையும், சமூக சிந்தனையை மேம்படுத்தவும் இணை செயல்பாடு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில் மன்றங்களை மீண்டும் புதுப்பித்து மாணவா்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.

இதன்படி திருப்பூா் மாவட்ட அளவிலான 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி தொடங்கிவைத்தாா்.

பேச்சுப் போட்டியில் 50 மாணவ, மாணவிகள், கட்டுரைப் போட்டியில் 50 மாணவ, மாணவிகள் என மொத்தம் 100 மாணவா்கள் பங்கேற்றனா். பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவா், மாணவி, கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவா், மாணவி என மொத்தம் 4 போ் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதில் இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் செங்கப்பள்ளி தலைமை ஆசிரியா் உதயகுமாா், பிச்சம்பாளையம் தலைமை ஆசிரியா் லட்சுமிபதி ஆகியோா் கலந்து கொண்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் ரவி செய்திருந்தாா்.

Tags:    

Similar News