உள்ளூர் செய்திகள்

தொழிற்சங்கங்கள், விவசாய நலச்சங்கங்கள், உள்நாட்டு மீனவர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் மனு

ஓ.என்.ஜி.சி வெளியேறினால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

Published On 2022-08-13 10:02 GMT   |   Update On 2022-08-13 10:02 GMT
  • ஓ.என்.ஜி.சி, ஒரு மத்திய அரசு நிறுவனம், காவிரி படுகையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறது.
  • படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், இலவச தொழில் பயிற்சியும் வழங்குகிறது.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் இருந்து ஓ.என்.ஜி.சி வெளியேறினால் காவிரி படுகையில் பத்தாயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தொழிற்சங்கங்கள், விவசாய நலச்சங்கங்கள், உள்நாட்டு மீனவர்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர்.

மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, இயற்கை எண்ணெய் எரிவாயு கழகமான ஓ.என்.ஜி.சி, ஒரு மத்திய அரசு நிறுவனம், காவிரி படுகையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தை சார்ந்து பல தொழில்கள், வணிக நிறுவனங்கள், நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள்.ஓ.என்.ஜி.சி மக்கள் பணியில் தொடர்ந்து செயலாற்றி கொண்டு இருக்கிறது, ஓ.என்.ஜி.சி நிறுவனம் பலமுறை மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தவில்லை எனவும், எதிர்காலத்தில் அப்படி எந்த திட்டமும் செயல்படுத்துவதில்லை என உறுதியாக தெரிவித்து விட்டது.

இந்தியாவின் எண்ணெய் எரிவாயு தேவையை பூர்த்தி செய்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாக செயலாற்றி வருகிறது. தமிழக அரசுக்கு ஆண்டிற்கு ஆயிரம் கோடிக்கு மேல் ராயல்டி தொகை வழங்கப்பட்டு நலத்திட்டங்கள செயல்படுத்தப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், இலவச தொழில் பயிற்சியும் வழங்குகிறது. சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கிராம, நகர பகுதிகளில் போர்வெல் அமைத்து சுத்தமான குடிநீர், கழிவறை கட்டுதல், குளம், குட்டை' வாய்க்கால் தூர்வாருதல், சமுதாய கூடங்கள், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், சாலை வசதிகள், விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குதல், படித்த இளைஞர்களுக்கு இலவச, படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, ஏழை பெண்களுக்கு தையல் மிஷின் வழங்குதல் போன்ற நலத்திட்ட களை செயல்படுத்துகிறது. குறிப்பாக புயல் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகளும் உணவும் வழங்கப்பட்டது. கஜா புயலின் போது வழங்கிய நிவாரண உதவிகள இன்னும் மக்கள் மனதில் நிலைத்துள்ளது.

இப்படி பல்வேறு வகையில் நாட்டை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் குறித்து ஆதாரமில்லாத குற்றசாட்டுகளை சிலர் கூறிவதுடன் இந்நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என கூறி வருகின்றனர். இதனால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். எனவே அவதூறு பரப்பும் தனிநபர்கள், தற்காலிக அமைப்புகள் மீது தமிழக அரசு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News