1 லட்சம் கையெழுத்து இயக்கம்சேலத்தில் இன்று தொடக்கம்
- சேலம் தெய்வீக தமிழ்சங்கம் அறக்கட்டளை சார்பாக 1 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
- தொடக்க விழாசேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் அருகே உள்ள ஹோட்டல் சாய் விஹாரில் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உற்பத்தியாகி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே காவிரியில் கலக்கும் புனித நதியான திருமணி முத்தாற்றை பாதுகாக்க வேண்டி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், சேலம் தெய்வீக தமிழ்சங்கம் அறக்கட்டளை சார்பாக 1 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழாசேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் அருகே உள்ள ஹோட்டல் சாய் விஹாரில் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முருகேச பூபதி, முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மோகன், ராசி கே.சரவணன், தியாகராஜன், என்.ஸ்ரீதர், ஆறுமுக உடையார், முருகன், ஜெய்சந்த் லோடா, ஓ டெக்ஸ் இளங்கோவன், டாக்டர் பி.எஸ்.பன்னீர்செல்வம், கவிஞர் பொன்னுரங்கன், பா.மா.ஆறுமுகம், ஸ்ரீஇராமன், லக்ஷ்மன் குமார் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செம்முனி, டாக்டர் சந்திரசேகர், தெய்வீக தமிழ்சங்க தலைவர் ராமன், பொருளாளர் ஸ்ரீதர், டாக்டர் கே.குமாரசாமி ஆகியோர் செய்துள்ளனர்.