உள்ளூர் செய்திகள்

காயல்பட்டினத்தில் மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Published On 2022-12-03 14:32 IST   |   Update On 2022-12-03 14:38:00 IST
  • காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த அமல்ராஜ் மகன் ஜெனோஸ்டன் . இவர் படகை கடற்கரையில் நிலை நிறுத்தும்போது அலையின் வேகம் காரணமாக அந்த படகு ஜெனோஸ்டன் மீது பலமாக மோதியது.
  • தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த அமல்ராஜ் மகன் ஜெனோஸ்டன் (வயது 23). இவர் படகை கடற்கரையில் நிலை நிறுத்தும்போது அலையின் வேகம் காரணமாக அந்த படகு ஜெனோஸ்டன் மீது பலமாக மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது குடும்பத்தினரை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதியும் வழங்கினார்.

மேலும் அரசு உதவிகளை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது அவருடன் தி.மு.க. முன்னாள் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள்சுடலை, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிக்கோ, வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுகு ரங்கநாதன், சிங்கித்துறை ஊர் தலைவர் அன்றன், வார்டு கவுன்சிலர் அஜ்வாது, நகர தி.மு.க இளைஞரணி செயலாளர் கலிலூர் ரகுமான் ஆகியோர் இருந்தனர்

Tags:    

Similar News