வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்

Published On 2025-10-28 09:55 IST   |   Update On 2025-10-28 09:55:00 IST
  • தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது.
  • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த 23-ந்தேதி தங்கத்தின் விலை சவரன் ரூ.92 ஆயிரமாக குறைந்தது. தொடர்ந்து 24-ந்தேதி தங்கத்தின் விலை குறைந்து ரூ.91 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. கடந்த 25-ந்தேதி சற்று உயர்ந்து சவரன் ரூ.92 ஆயிரமாக அதிகரித்தது. 26-ந்தேதியும் அதேவிலையில் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை 2-வது நாளாக இன்று அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

 

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600

26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

25-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

24-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,200

23-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

27-10-2025- ஒரு கிராம் ரூ.170

26-10-2025- ஒரு கிராம் ரூ.170

25-10-2025- ஒரு கிராம் ரூ.170

24-10-2025- ஒரு கிராம் ரூ.170

23-10-2025- ஒரு கிராம் ரூ.174

Tags:    

Similar News