GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?
- வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்தது. மேலும் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என இருவேளையிலும் தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்ததால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,400-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,200 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 170 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,320
16-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400
15-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400
14-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,920
13-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.95,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-11-2025- ஒரு கிராம் ரூ.173
16-11-2025- ஒரு கிராம் ரூ.175
15-11-2025- ஒரு கிராம் ரூ.175
14-11-2025- ஒரு கிராம் ரூ.180
13-11-2025- ஒரு கிராம் ரூ.183