வணிகம் & தங்கம் விலை

ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சர்வதேச அளவில் கடும் வீழ்ச்சி - ஏன் தெரியுமா?

Published On 2025-10-22 11:47 IST   |   Update On 2025-10-22 11:47:00 IST
  • ஒரே நாளில் தங்கம் விலை 6.3% சரிந்தது.
  • ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி இன்று 8.7% சரிவை சந்தித்தது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 8-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரம் என்ற உச்சத்தையும் கடந்தது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையாகிறது.

இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இன்று சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பெரும் வீழ்ச்சியை சந்தித்தன

ஒரே நாளில் தங்கம் விலை 6.3% சரிந்து, ஒரு அவுன்ஸ் சுமார் $4,082-54,143 வரை வர்த்தகம் ஆனது. இது 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

அமெரிக்கா-சீனா இடையேயான புவிசார் அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக மாறியதாலும், முதலீட்டாளர்கள் தங்கம் மூலம் கிடைத்த பங்குகளை விற்று லாபம் ஈட்ட முடிவுசெய்ததாலும், ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எதிர்பார்த்த மாற்றத்தை செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதால் அமெரிக்கா டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியதாலும் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி இன்று 8.7% சரிவை சந்தித்து சுமார் $47.89-$48.40 ஒரு அவுன்ஸ் என்ற நிலையை அடைந்தது. இது பிப்ரவரி 2021-க்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

Tags:    

Similar News