செய்திகள்

அரசு திட்டங்களுக்கு எதிராக சில கட்சிகள் செயல்படுகிறது- வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Published On 2018-07-13 15:03 IST   |   Update On 2018-07-13 15:03:00 IST
அரசு திட்டங்களுக்கு எதிராக ஒரு சில கட்சிகள் செயல்படுகிறது என்று சேலத்தில் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம்:

சேலம் மாவட்டம் பா.ஜ.க. சார்பில் சேலம் மாநகர், கிழக்கு, மேற்கு மற்றும் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில பா.ஜ.க.பொதுச்செயலாளரும், சேலம் மண்டல பொறுப்பாளருமான வானதி சீனிவாசன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிகளை நாங்கள் உடனடியாக ஆரம்பித்து விட்டோம். 3 மாத காலத்திற்கு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யக்கூடிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த மாத இறுதிக்குள்ளாகவே ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும், அந்த தொகுதியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் கண்டறியப்பட்டு அதற்கான போராட்டம், கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும் என கட்சி உத்தரவிட்டு இருக்கிறது.


மத்திய அரசாங்கம் சேலம் பகுதிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் ராணுவ தளவாடம், சேலம்-சென்னைக்கு இடையே 8-வழி பசுமை சாலை உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் அரசியல் காரணமாக பிரதமரும், பா.ஜ.க.வும் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் எதிராக இருப்பது போன்ற ஒரு சித்திரத்தை வரைய முற்படுகிறார்கள். அரசு திட்டங்களுக்கு எதிராக ஒரு சில கட்சிகள் செயல்படுகிறது. மக்கள் நல ஆர்வலர்கள், சமூக போராளிகள் என்கின்ற போர்வையிலே ஒரு சில தேச விரோத இயக்கங்கள் அதற்கு பிண்ணனியில் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சிவகாமி பரமசிவம், கோட்ட பொறுப்பாளர் முருகேசன், இணை செயலாளர் அண்ணாதுரை, மாநகர் மாவட்ட மகளிரணி தலைவி நளினி உள்பட பலர் கலந்து கொண்டனர். #BJP #VanathiSrinivasan
Tags:    

Similar News