செய்திகள்

லாரி ஸ்டிரைக்குக்கு தீர்வு காணவேண்டும்- மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

Published On 2018-06-20 13:29 IST   |   Update On 2018-06-20 13:29:00 IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #LorryStrike
சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 3 தினங்களாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.


ஆகவே, மத்திய அரசு லாரி உரிமையாளர்களை உடனடியாக அழைத்து பேசி பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என்றும், தமிழக முதல்- அமைச்சர் ‘வழக்கம் போல்’ நமக்கென்ன என்று இருந்து விடாமல், அவர்களை அழைத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #LorryStrike
Tags:    

Similar News