சினிமா செய்திகள்
தனுஷ் 54 படத்தின் தலைப்பு வெளியீடு!
- தேரே இஷ்க் மே படம் தமிழில் சரியான வரவேற்பை பெறவில்லை.
- முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தேரே இஷ்க் மே. ஹிந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ஹிந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.
தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு படக்குழு படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு 'கர' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.