செய்திகள்

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது- எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published On 2018-05-20 17:54 IST   |   Update On 2018-05-20 17:54:00 IST
காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #cauveryissue #edappadipalanisamy #supremecourt

அவனியாபுரம்:

கொடைக்கானலில் மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புவதற்காக இன்று மதுரை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. எனவே இனி அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த தேவையில்லை.

அ.தி.மு.க. அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி காவிரி பிரச்சினையில் வெற்றி பெற்றுள்ளது. 32 ஆண்டுகளாக நடந்து வந்த பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். #cauveryissue #edappadipalanisamy #supremecourt

Tags:    

Similar News