செய்திகள்
நாகையில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற எச். ராஜா-ஆதரவாளர்கள் கைது
திருமாவளவனைக் கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காகச் சென்ற எச்.ராஜாவை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
நாகை:
இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாக கூறி பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தான் அவ்வாறு பேசவில்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்தபிறகும், ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது.
இந்நிலையில், நாகையில் திருமாவளவனைக் கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால், காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. எனினும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நாகைக்கு புறப்பட்டு வந்தார்.
அவரை வாஞ்சியூரில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவரை வரவேற்க வந்த 100-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது, போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.