லைஃப்ஸ்டைல்

குழந்தை பிறப்பிற்கு பின் அலுவலம் செல்லும் பெண்களுக்கு

Published On 2019-04-16 07:49 GMT   |   Update On 2019-04-16 07:49 GMT
தாயான பிறகு குழந்தையை கவனித்துக்கொள்வது, தாய்மைக்கு பிறகான உடல் மாற்றங்களுக்கு நடுவில் மீண்டும் வேலைக்குத் திரும்புவது கடினமாக இருக்கலாம்.
தாயான பிறகு குழந்தையை கவனித்துக்கொள்வது, தாய்மைக்கு பிறகான உடல் மாற்றங்களுக்கு நடுவில் மீண்டும் வேலைக்குத் திரும்புவது கடினமாக இருக்கலாம். அதை எளிதாக்கும் குறிப்புகளை பார்க்கலாம்.

உங்கள் உடல் இந்த நிலையை அடைய 9 மாதங்கள் ஆனது. எனவே அது  பழைய நிலைக்கு வர பொறுமை அவசியம். உங்களுக்கான புதிய ஆடைகளை வாங்கி உடுத்திக்கொள்ளவும். பாதங்களின் அளவு மாறியிருக்கலாம். புதிய ஷூக்கள் வாங்கவும். பணிக்கு செல்வதற்கு தயாராக தேவையான அவகாசம் அவசியம்.

வேலைக்குச் செல்வது உங்களை மோசமான அம்மாவாக ஆக்காது என்பதை நினைவில். வேலைக்குச் செல்லும் முன்பு தினமும் கொஞ்சம் வெளியே சென்று வருவது குழந்தையை மிஸ் செய்வதன் வலியைக் குறைக்கும்.

குழந்தையிடமிருந்து பிரிந்திருப்பது உங்களுக்கும் குழந்தைக்கும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம் என்பதால் பணிக்கு திரும்பும் நாளை வாரத்தின் மத்தியில் தேர்வு செய்யுங்கள்.

பணிக்கு திரும்பும் போது அலுவலக சூழல் மாறியிருக்கலாம். புதியவர்கள் வேலைக்கு சேர்ந்திருக்கலாம். எனவே மீண்டும் பணிக்கு சேரும் முன் மேலதிகாரியை சந்தித்து பணியாற்றக்கூடிய திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பணிக்கு செல்லும் முன்பு ட்ரையல் பார்க்கவும். குழந்தைக்கு பாலூட்ட 20 நிமிடம் அல்லாமல் 10 நிமிடமே போதுமானதாக இருக்கலாம். முன்னதாக செய்து பார்ப்பது முதல் நாள் பதற்றத்தை குறைக்கும்.

பாலூட்டுவதில் உள்ள சிக்கலை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அலுவலக  மேஜையில் நர்சிங் பேட் வைக்கவும். குழந்தைக்கு போதிய பால் கிடைக்கும் வகையில் முந்தைய இரவு அல்லது காலையில் பாலை பிழிந்து வைக்கவும். தேவை எனில் பணி இடத்தில் மாற்று உடை வைத்திருக்கவும். பணிக்கு செல்லும் வழியில் இமெயில், மளிகை போன்றவற்றை கவனிக்கவும். பில்களை ஆன்லைனில் செலுத்தவும். இதன் மூலம் குழந்தைக்கு போதிய நேரம் ஒதுக்கலாம்.  

பசியுடன் குழந்தைக்கு பாலூட்ட வேண்டாம். உலர் பழங்கள் போன்ற ஆரோக்கியமானவற்றை சாப்பிட்டு உடம்பை தெம்பாக வைக்கவும்.

பணியில் இருந்து திரும்பும் வரை குழந்தையை பாதுகாப்பானவர்களிடம் ஒப்படையுங்கள். பல குழந்தை மையங்களில் 18 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளையே அனுமதிக்கின்றனர்.

குழந்தையை பார்த்துக்கொள்பவரை மரியாதையுடன் நடத்தவும். அவசர கால தொடர்பு எண்களை தரவும். பணம் கொடுத்து வைக்கவும்.
Tags:    

Similar News