லைஃப்ஸ்டைல்

பல சாதனைகளை படைக்கும் பெண்கள்

Published On 2018-08-06 05:14 GMT   |   Update On 2018-08-06 05:14 GMT
பெண்ணடிமை எனும் விலங்கை உடைத்து எறிந்து இன்றைய நாகரீக உலகின் பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.
பெண்ணடிமை எனும் விலங்கை உடைத்து எறிந்து இன்றைய நாகரீக உலகின் பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். பெண்ணடிமை என்ற இரும்பு கூண்டிலிருந்து இன்றைய பெண்கள் சுதந்திர பறவைகளாக சிறகடித்து பறக்கின்றனர். காவல்துறை, சட்டத்துறை, அரசியல், தகவல் தொடர்பு துறை உள்பட அனைத்து துறைகளிலும் இன்று பெண்கள் பெரிய பதவிகளை வகித்து திறம்பட செயல்படுகின்றனர்.

மருத்துவ துறையிலும் பெண்கள் வியக்கத் தக்க சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்தியாவை வழிநடத்திய பிரதமர் பதவியில் இந்திரா காந்தி இருந்திருக்கிறார். பல பெண்கள் முதல்-அமைச்சர் நாற்காலியை அலங்கரித்து இருக்கிறார்கள். இருந்து கொண்டும் இருக்கிறார்கள். விண்வெளிக்கு சென்ற கல்பனா சாவ்லா இந்திய வம்சா வளியை சேர்ந்தவர் தான்.

போக்குவரத்து துறையிலும் பெண் ஓட்டுனர்கள் வந்து விட்டனர். விளம்பர துறையிலும் பெண்கள் நல்ல நிலையை அடைந்து உள்ளனர். உலக அழகிப்போட்டியிலும் இந்திய பெண்கள் மகுடம் சூடி இருக்கிறார்கள். குடும்ப பெண்கள் தங்கள் வீட்டு கடமைகளை முடித்துவிட்டு பகுதிநேர வேலைக்கு சென்று கணவரின் கஷ்டத்தில் பங்கெடுக்கின்றனர். வேளாண்மை துறையிலும் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுபோல பல துறைகளில் பெண்களின் முன்னேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படிப்பிலும் மாணவிகள் முதலிடத்தை பிடித்து ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்து வருகின்றனர். விளையாட்டு துறைகளிலும் பெண்கள் பங்கேற்று இந்தியாவிற்கு பதக்கங்களை பெற்று தந்துள்ளார்கள். அதேபோல மாணவ சமுதாயத்தை சேர்ந்த நாமும் நல்ல முறையில் படித்து தாய், தந்தையருக்கும், தாய் நாட்டுக்கும் பெருமை சேர்ப்போமாக.

Tags:    

Similar News