லைஃப்ஸ்டைல்

குண்டான பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

Published On 2018-11-19 05:54 GMT   |   Update On 2018-11-19 05:54 GMT
உடல் பருமன்தான் பலவித நோய்களுக்கு காரணியாக இருந்தாலும் பெண்கள் கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணிகளில் மிக முக்கிய பங்காற்றுகிறது.
உடல் பருமன்தான் பலவித நோய்களுக்கு காரணியாக இருந்தாலும் பெண்கள் கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணிகளில் மிக முக்கிய பங்காற்றுகிறது. உடல் பருமன் அதிகமாவதால் கருமுட்டைகளின் உற்பத்தி திறன் பாதிப்பு, வளர்வதில் மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், இன்சுலின் சுரப்பில் மாறுபாடு, கருமுட்டை வளர்ச்சி, முதிர்ச்சி, வெளியாகும் திறன், கருவாக்கும் திறன் ஆகியவை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.

உடல் பருமன் அதிகமாவதால் கரு உருவாகும் போது ஹார்மோன் குறைகள் ஏற்பட்டு, அபார்ஷன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மேலும் கர்ப்பகாலத்தில் சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்பு பலமடங்கு அதிகரித்து அதனால் ஏற்படும் பின்விளைவுகளான கருவில் குறைபாடு, கரு வளரும் போது கருவின் இதயம், மூளை, நரம்பு மண்டலம், சிறுநீரகம் மற்றும் கை, கால்களில் குறைபாடுகள் போன்றவை கருவிற்கு ஏற்படுவதால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

உடல் பருமன் அதிகரிப்பதால் திடீரென்று குழந்தை கருவிலே இறப்பது கூட ஏற்படலாம். கர்ப்பகாலத்தில் உப்பு சத்து மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பது இதனால் ஏற்படும் பின்விளைவுகளும் அதிகமாகலாம். இரத்த அழுத்தம் அதிகமாவதால் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம், வயிற்றிலேயே குழந்தை இறந்து போதல், தாய்க்கு நஞ்சு பிரிதல், வலிப்பு நோய் மற்றும் உயிருக்கு ஆபத்தான பின்விளைவுகளும் ஏற்படலாம்.

Tags:    

Similar News