பெண்கள் உலகம்

கருத்தடை முறைகளில் ஏற்படும் தவறுகள்

Published On 2018-05-17 10:26 IST   |   Update On 2018-05-17 10:26:00 IST
சில தவறான அணுகுமுறை அல்லது நீங்கள் முயன்ற கருத்தடை முறையில் ஏற்பட்ட தவறினால் கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கருத்தரிப்பதை தடுக்க தான் கருத்தடை முறைகள் கையாளப்படுகின்றன. ஆயினும் சிலமுறை எதிர்பாராத வகையில் கருத்தரிப்பு ஏற்படுவது உண்டு. சில தவறான அணுகுமுறை அல்லது நீங்கள் முயன்ற கருத்தடை முறையில் ஏற்பட்ட தவறினால் கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும்பாலும் தம்பதியர் மத்தியில் பொதுவான சில தவறுகள் தான் கருத்தடை முறையில் எழுகின்றன.

அது மீண்டும் வராமல் இருக்க என்ன வழிகள் இருக்கின்றன. பாதுகாப்பான முறையில் உடலுறவுக் கொண்டு கருத்தரிப்பதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கு காணலாம்…

உங்களுக்கு ஏற்ற கருத்தடை மாத்திரை உட்கொள்ள வேண்டியது அவசியம். பிறப்புறுப்பில் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு சில கருத்தடை மாத்திரைகள் சரியான பலன் தராது. எனவே, மருத்துவரிடம் ஆலோசித்து உங்களுக்கு ஏற்ற மாத்திரைகள் பயன்படுத்துவது அவசியம்.

வேசிலின் அல்லது பேபி ஆயில் போன்றவை பயன்படுத்துவது ஆணுறையின் தன்மையை பாதிக்கிறது. அதனால் கூட கருத்தரிக்க வாய்ப்பிருப்பதாய் கூறப்படுகிறது. இதற்கு சிலிகான் எண்ணெய் பயன்படுத்துவது நல்ல தீர்வளிக்கும்.

சீரான முறையில் அல்லது சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்ள தவறுவதும் கூட கருத்தரிக்க வாய்ப்பாக அமையும்.

மாதவிடாய் சுழற்சியில் பாதுகாப்பான நாட்களில் உடலுறவுக் கொள்வதன் மூலம் நீங்க கருத்தரிப்பதை தவிர்க்க முடியும்.

தரமற்ற ஆணுறை உபயோகிப்பதன் காரணமாக கூட கருத்தரிப்பு ஏற்படுகின்றன. எனவே, தரமான ஆணுறைப் பயன்ப்படுத்த வேண்டியது அவசியம்.
Tags:    

Similar News