அழகுக் குறிப்புகள்

நரை முடி, முடிகொட்டுதல் பிரச்சினைக்கு ஒரு சிறந்த தீர்வு

Published On 2023-08-20 06:42 GMT   |   Update On 2023-08-20 06:42 GMT
  • தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.
  • வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வரலாம்.

உலகம் முழுவதும் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடி என்பது ஒருவரை அழகாகவும் இளமையாகவும் காட்டக்கூடியது. அதனால் பலரும் அதற்காக நேரமும் பணமும் செலவிட தயங்கவதே இல்லை.

இன்னும் சிலர் மற்றவர்களுக்கு எப்படி சரியானது என்று கேட்டு, அதன்படி தானும் செய்து மேலும் முடியை இழந்த கதைகள் ஏராளம். தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.

பொதுவாக முடி நம் உடலின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது முக அழகையும் குறிக்கும் முதன்மையான விஷயமாகும். நீங்கள் முடி தீர்வு தேடுகிறீர்களானால், வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எளிய முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வரலாம். அதிக விலையில் விற்பனையாகக்கூடிய எண்ணெய் வகைகளை பயன்படுத்தி ஏமாற வேண்டாம்.

அந்தவகையில் தற்போது முடி கொட்டும் பிரச்சினையை எப்படி எளியமுறையில் சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:-

தேங்காய் எண்ணெய்- 2 லிட்டர்

கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி

செம்பருத்தி பூ- இரு 10 பூ

செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி

வேப்பிலை- ஒரு கைப்பிடி

மருதாணி இலை- ஒரு கைப்பிடி

சாம்பார் வெங்காயம்- 5 நம்பர் (இடித்தது)

சோற்றுக்கற்றாலை- ஒரு கப்

வெந்தயம்- 2 டீஸ்பூன்

பெரிய நெல்லிக்காய்- 3 (இடித்தது)

கருசீரகம்- 2 டீஸ்பூன்

வெட்டிவேர்- ஒரு கைப்பிடி

செய்முறை:

ஒரு பெரிய அயன் கடாயில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்ததும், கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை மற்றும் முடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி, வெங்காயம், நெல்லிக்காய் இதனை இடித்து சேர்க்க வேண்டும். கற்றாலையை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், வெட்டி வேர் போன்றவர்றை மிதமான தீயில் வைத்து அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கொதிக்க விட வேண்டும். சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நன்றாக நிறம் மாறி வரும் வரை அதனை காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனை ஒருநாள் முழுவதும் அதே பாத்திரத்தில் வைக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் எசன்ஸ்சும் அந்த தேங்காய் எண்ணெயில் நன்றாக ஊறி இறங்கிய பிறகு வடிகட்டி அதனை தேவையான டப்பாக்களில் வைத்து பயன்படுத்தலாம். 2, 3 மாதங்கள் இருந்தாலும் இந்த எண்ணெய் கெட்டுப்போகாது.

முடிகொட்டுதல் பிரச்சினை மற்றும் முடி அடர்த்தி அதிகமாக இல்லை என்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும், பொடுகு தொல்லை உள்ளவர்களுக்கும் இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உபயோகப்படுத்தி பயன்பெறுங்கள்.

Tags:    

Similar News