லைஃப்ஸ்டைல்

வெயிலில் இருந்து எளிய முறையில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?

Published On 2019-05-14 05:48 GMT   |   Update On 2019-05-14 05:48 GMT
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சருமம் வறண்டு போகும். கோடையின் போது நம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வு குறித்து அறிந்து கொள்ளலாம்.
‘கோடையில் சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் சூரியக் கதிர்களில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பாதிக்கும். இதனால் எரிச்சல், வெள்ளைத் தழும்பு, வெடிப்பு ஏற்படும். சருமம் கருப்பாகவும் மாறும். மங்கு பிரச்சனையும் ஏற்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சருமம் வறண்டு போகும்.

அதை தடுக்க இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொள்ளலாம். கை மற்றும் கால்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பருத்தியாலான கிளவுஸ் மற்றும் சாக்ஸ் அணியலாம். ஹெல்மேட் அணிவதால் அது தலைமுடி வறண்டு போகாமல் பாதுகாக்கும். அதே சமயம் ஹெல்மெட் அணியும் போது தலையில் ஒரு பருத்தி துணியை போட்டு அதற்கு மேல் ஹெல்மெட்டை அணியலாம்.



பெண்கள் மத்தியில் தலைமுடிக்கு டை பூசுவது அதிகரித்துவிட்டது. அவ்வாறு பூசும் போது ரசாயன டைகளை தவிர்த்து விட்டு மருதாணி மற்றும் ஆர்கானிக் டைகளை பயன்படுத்தலாம். உடைகளில், உடலை இறுக்கிப் பிடிக்காத மற்றும் உறுத்தாத பருத்தி ஆடைகள் அணியலாம். பனியன் துணியாலான டிஷர்ட் இந்த காலத்தின் சிறந்த உடை. வெளியே செல்லும் போது பிங்க், நீலம், வெளிர் மஞ்சள் போன்ற மெல்லிய நிற உடைகளை அணியலாம். கோடைக் காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக அணியும் உடை உள்ளாடைகள் தான்.

சரியான முறையில் தேர்வு செய்து அணியாவிட்டால் சரும பிரச்னைகள் வரும். கருப்பு, சிவப்பு மற்றும் அடர்த்தியான நிறங்கள் கொண்ட உள்ளாடைகளை அணியக்கூடாது. வெள்ளை மற்றும் சரும நிற பருத்தி உள்ளாடைகளை அணிவதே நல்லது. குறிப்பாக வியர்வை அதிகமாக வெளியாகும் போது மங்கு, அரிப்பு போன்ற பிரச்சனை ஏற்படும். எலாஸ்டிக் மற்றும் வயரிங் கொண்ட உள்ளாடைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். உள்ளாடைகளையும் மாற்றுங்கள்’’.     

Tags:    

Similar News