லைஃப்ஸ்டைல்

சருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் தயிர்

Published On 2019-01-14 05:39 GMT   |   Update On 2019-01-14 05:39 GMT
சருமம், கூந்தல் பிரச்சனைகளுக்கு தயிர் நல்ல தீர்வை தருகிறது. இன்று தயிரை எந்த முறையில் பயன்படுத்தி சருமம், கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று பார்க்கலாம்.
உங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது  குறையும்.

எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாறும். தயிரை முகம் மற்றும் உடம்பில்  தடவி வந்தால் வெயினால் ஏற்பட்ட சரும கருப்பு நீங்கும். மேலும் சருமம் மென்மையாகும்.

டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும் முகப்பருக்களை சரி செய்ய தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் முகப்பருக்கள்  மறையும்.

தயிருடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியில் தடவி காய்ந்ததும் கழுவினால் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதை வாரம் இருமுறை  செய்தாலே போதுமானது.

1 ஸ்பூன் தேனை 2 ஸ்பூன் தயிருடன் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். தொடர்ந்து இதனை செய்யும்போது உங்கள் வறண்ட, டல்லாகியிருக்கிற சருமத்தை, பளிச்சின்னு மாற வைக்கும் என்பது உறுதி 
Tags:    

Similar News